| 245 |
: |
_ _ |a அச்சிறுப்பாக்கம் ஆட்சீசுவரர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a அச்சுஇறுபாக்கம், அச்சிறுபாக்கம் |
| 520 |
: |
_ _ |a சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகத்தை அடுத்து இவ்வூர் உள்ளது. அச்சரப்பாக்கம் என்று தற்போது மக்கள் வழக்கில் வழங்கப்பட்டு வரும் அச்சிறுப்பாக்கம் சிவன் கோயில் தொண்டைமண்டலத்தின் பாடல் பெற்ற தலங்களில் 29-வது தலமாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பாடியுள்ளார். இக்கோயிலில் ஆட்சீசுவரர், உமையாட்சீசுவரர் என இரண்டு கருவறைகள் உள்ளன. உமையாட்சீஸ்வரர் சந்நிதி, வாயிலுக்கு நேரே உள் திருச்சுற்றில் அமைந்துள்ளது. சித்திரைத் பெருவிழாவில் 11-ஆம் நாள் சுவாமி 'பெரும்பேறு கண்டிகை' கிராமத்திற்கு எழுந்தருளி, அகத்தியருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது. கௌதமமுனிவர், கண்ணுவமுனிவர் ஆகியோர் இங்கு வழிபட்டதாக தலபுராணம் கூறுகின்றது. தலபுராணத்தோடு தொடர்புடைய அச்சு முறி விநாயகர் தனி சந்நிதி கொண்டுள்ளார். |
| 653 |
: |
_ _ |a அச்சிறுப்பாக்கம், அச்சரப்பாக்கம், சிவன் கோயில், ஆட்சீசுவரர் கோயில், ஆட்சிபுரீசுவரர் கோயில், பாடல் பெற்ற தலங்கள், தேவாரத் தலங்கள், தொண்டை மண்டலக் கோயில்கள், தமிழ்நாட்டு சிவாலயங்கள், திருஞானசம்பந்தர், ஆட்சீஸ்வரர், உமையாட்சீஸ்வரர், இளங்கிளி அம்மை, உமையாம்பிகை, காஞ்சிபுரம், மதுராந்தகம் |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 902 |
: |
_ _ |a 044 - 27523019. 09842309534. |
| 905 |
: |
_ _ |a கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். |
| 914 |
: |
_ _ |a 12.59848062 |
| 915 |
: |
_ _ |a 80.09650111 |
| 918 |
: |
_ _ |a இளங்கிளி அம்மை, உமையாம்பிகை |
| 922 |
: |
_ _ |a சரக்கொன்றை |
| 923 |
: |
_ _ |a தேவ, பானு, சங்கு |
| 924 |
: |
_ _ |a காமீகம் |
| 925 |
: |
_ _ |a இருகால பூசை |
| 926 |
: |
_ _ |a சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பௌர்ணமி வழிபாடு |
| 927 |
: |
_ _ |a மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்துத் தென்பால் தனியூர் அச்சிறுபாக்கம்' என்று இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது. கருவறைத் திருச்சுற்றுச்சுவரில் சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறையில் இலிங்க வடிவில் ஆட்சிபுரீசுவரர் காட்சியளிக்கிறார். கருவறை வெளிப்புற தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, நான்முகன் உள்ளனர். அர்த்தமண்டப கோட்டங்களில் விநாயகர், துர்க்கை ஆகிய சிற்பங்களும், பிரமகபால மாலையுடன் பைரவர், நாகமொன்று சிவலிங்கத்தை வழிபடுவது, காரைக்காலம்மை தலையால் நடப்பது, கண்ணப்பர் கண்ணைப் பெயர்க்கும்போது இறைவனின் கை வெளிப்பட்டுத் தடுப்பது, ஒரு தலையுடன் இருமான்கள் போன்ற புடைப்புச் சிற்பங்களும், தனி சந்நிதியில் அச்சுமுறி விநாயகர், முருகன் ஆகிய தனி சிற்பங்களும் குறிப்பிடத்தக்கவை. உமையாட்சீஸ்வரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாச பெருமாள், பழனிஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன. கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். |
| 930 |
: |
_ _ |a நான்முகனிடம் வரம் பெற்ற வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். ஆனால் அவ்வாறு புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க தேவர்கள் மறந்தனர். அதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்து விட்டார். தேர் அச்சு முறிந்ததற்குக் காரணம் விநாயகர் தான் என்பதை உணர்ந்த சிவன் அவரை வேண்டினார். தந்தை சொல் கேட்ட விநாயகர் தேரின் அச்சை சரியாக்கினார். அதன் பின் சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமாதலால் இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி தற்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது. முன்பொருமுறை இவ்வூர் வழியே சென்ற பாண்டிய மன்னன் ஒருவன் காட்டு முல்லைக் கொடிகள் சூழ்ந்தவிடத்தில் பொன்நிறமான உடும்பு ஒன்று ஓடுவது கண்டு துரத்திச் சென்றான். அது ஓடிச்சென்று சரக்கொன்றை மரத்தின் பொந்தில் புகுந்து கொண்டது. அரசன் ஆணைப்படி ஏவலர்கள் அம்மரத்தை வெட்ட, குருதி வெளிப்பட, தோண்டுகையில் சிவலிங்கம் வெளிப்பட்டது. வெட்டிய தழும்புப்பட்ட இறைவனுக்கு, அரசன் "திரிநேத்திரதாரி " என்னும் முனிவரிடம் செல்வத்தைத் தந்து கோயில் கட்டச் செய்தான். அவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரைக் கேட்க, அவர் அரசே! உம்மை ஆட்கொண்டவர் "உமையாட்சீஸ்வரர் "; எமையாட்கொண்டவர் "ஆட்சீஸ்வரர் " என்று மறுமொழி தந்ததாக தலவரலாறு கூறுகின்றது. |
| 932 |
: |
_ _ |a ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேராக இல்லாமல் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று இடதுபுறம் அமைந்துள்ளது. இக்கோயிலில் இரண்டு கருவறைகள் அமைந்துள்ளன. கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. உள் வாயில் நுழைந்தவடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு எதிரே உள்ளபடி அமைந்திருக்கும் ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த ஆட்சீஸ்வரர் சந்நிதி இக்கோயிலின் முக்கியமான மூலவர் கருவறையாகும். உள் வாயிலைக் கடந்தவுடன் வலதுபுறம் உள்ள ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு சற்று நேரே உமையாட்சீஸ்வரர் கருவறை அமைந்துள்ளது. கோயிலின் வடபுற வெளித்திருச்சுற்றில் தலமரமான சரக்கொன்றையின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி காணப்படுகின்றது. அருகில் நந்திகேசுவரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர். வடபுற வெளித்திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சுமுறி விநாயகர்" என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார். |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a மேல்மருவத்தூர் அம்மன் கோயில், செய்யூர் முருகன் கோயில் |
| 935 |
: |
_ _ |a அச்சிறுபாக்கத்திற்கு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, சுமார் 4 கி.மீ. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோயிலை அடையலாம். அச்சிறுபாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மி. தொலைவில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 6-30 மணி முதல் 11-30 மணி மாலை 4-30 மணி முதல் 8-30 மணி |
| 937 |
: |
_ _ |a அச்சிறுப்பாக்கம் |
| 938 |
: |
_ _ |a அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர் |
| 939 |
: |
_ _ |a மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a சென்னை விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000317 |
| barcode |
: |
TVA_TEM_000317 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0008.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0001.jpg
TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0002.jpg
TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0003.jpg
TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0004.jpg
TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0005.jpg
TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0006.jpg
TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0007.jpg
TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0008.jpg
TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0009.jpg
TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0010.jpg
TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0011.jpg
TVA_TEM_000317/TVA_TEM_000317_அச்சிறுப்பாக்கம்_ஆட்சீசுவரர்-சுவாமி-கோயில்-0012.jpg
|